​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
100 ரூபாய் கொடுத்து விவசாயிகள் போராட்டத்துக்கு மூதாட்டி அழைத்து வரப்பட்டிருப்பதாக கருத்து: கங்கனா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க சீக்கிய அமைப்பு வலியுறுத்தல்

Published : Dec 04, 2020 4:25 PM



100 ரூபாய் கொடுத்து விவசாயிகள் போராட்டத்துக்கு மூதாட்டி அழைத்து வரப்பட்டிருப்பதாக கருத்து: கங்கனா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க சீக்கிய அமைப்பு வலியுறுத்தல்

Dec 04, 2020 4:25 PM

100 ரூபாய் கொடுத்து விவசாயிகள் போராட்டத்துக்கு மூதாட்டி  அழைத்து வரப்பட்டிருப்பதாக கருத்து வெளியிட்டதற்கு  இந்தி நடிகை கங்கனா ரணாவத் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென சீக்கிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

சாகீன் பாக் போராட்டத்தில் கலந்து கொண்ட பில்கிஸ் பானு என்ற மூதாட்டி டெல்லி  விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள செவ்வாய்க்கிழமை வந்தபோது போலீசாரால் தடுக்கப்பட்டார். 

இந்நிலையில் டுவிட்டரில் கங்கனா ஒரு மூதாட்டி படத்தை வெளியிட்டு, அவர்தான் பானு என்றும் 100 ரூபாய் கொடுத்து அழைத்து வந்துள்ளனர் என்றும் பதிவிட்டிருந்தார்.

இதற்காக  ஒருவாரத்துக்குள் மன்னிப்பு கேட்கக்கோரி டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எதிர்ப்பை தொடர்ந்து டுவிட்டரில் தனது பதிவை கங்கனா நீக்கியுள்ளார்.