​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2020 நவம்பரில் ஜிஎஸ்டி வரி மூலம் ரூ.1,04,963 கோடி வருவாய் - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

Published : Dec 01, 2020 4:24 PM

2020 நவம்பரில் ஜிஎஸ்டி வரி மூலம் ரூ.1,04,963 கோடி வருவாய் - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

Dec 01, 2020 4:24 PM

நவம்பர் மாதத்தில் 1 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஜிஎஸ்டி வரி மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் மாதத்தில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 963 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாகவும், இது கடந்த ஆண்டு நவம்பரில் கிடைத்த தொகையை காட்டிலும் 1.4 சதவீதம் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மொத்த வருவாயில் மத்திய ஜிஎஸ்டி மூலம் ஈட்டப்பட்ட 19 ஆயிரத்து 189 கோடியும், மாநில ஜிஎஸ்டி மூலம் ஈட்டப்பட்ட 25,540 கோடி ரூபாயும், ஒன்றிணைந்த ஜிஎஸ்டி மூலம் ஈட்டப்பட்ட 51,992 கோடி ரூபாயும், செஸ் மூலம் ஈட்டப்பட்ட 8,242 கோடி ரூபாயும் அடங்கும் எனவும் நிதியமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.