நடிகை ஊர்மிளா மடோன்கர் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.
கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஊர்மிளா, பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்று கூறி கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் முதலமைச்சரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே முன்னிலையில், ஊர்மிளா சிவசேனா கட்சியில் இணைந்தார். உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே, ஊர்மிளாவின் கையில் காவி கயிறு கட்டினார்.