​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடையில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Published : May 30, 2018 5:43 PM



மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடையில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

May 30, 2018 5:43 PM

மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆதின மடத்திற்குள் நுழையவும், நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி மகாதேவன் தடை விதித்தார். இதை எதிர்த்து திருவண்ணாமலை நித்யானந்தா பீடத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது.

மேலும் இதுகுறித்து இந்து சமய அறநிலைய துறை, மதுரை ஆதீனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை ஜூன் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.