​​ இந்திய அதிகாரிகள் மீதான கனடா பிரதமரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - வெளியுறவுத்துறை அமைச்சகம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய அதிகாரிகள் மீதான கனடா பிரதமரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - வெளியுறவுத்துறை அமைச்சகம்

Published : Mar 01, 2018 12:18 AM

இந்திய அதிகாரிகள் மீதான கனடா பிரதமரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - வெளியுறவுத்துறை அமைச்சகம்

Mar 01, 2018 12:18 AM

கனடா பிரதமருடனான விருந்துக்கு காலிஸ்தான் முன்னாள் தீவிரவாதிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு என்ற தகவலை வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு இந்தியாவந்திருந்த போது கனடா தூதர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் காலிஸ்தான் முன்னாள் தீவிரவாதியான ஜஸ்பால் அட்வால் கலந்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அட்வாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா தூதரக அதிகாரிகள் மூலம் தெரியவந்திருப்பதாக ஜஸ்டின் ட்ரூடு நேற்று தெரிவித்தார். இதனை மறுத்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இந்த விவகாரத்தில் இந்தியா அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கனடாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றதும் உண்மைக்குப் புறம்பானதுமாகும் என்று தெரிவித்தார்.