​​ CBSE 10ம் வகுப்புத் பொதுத்தேர்வில் மொத்த 33% இருந்தாலே தேர்ச்சி என அறிவிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
CBSE 10ம் வகுப்புத் பொதுத்தேர்வில் மொத்த 33% இருந்தாலே தேர்ச்சி என அறிவிப்பு

CBSE 10ம் வகுப்புத் பொதுத்தேர்வில் மொத்த 33% இருந்தாலே தேர்ச்சி என அறிவிப்பு

Mar 01, 2018 12:01 AM

பத்தாம் வகுப்பு படிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் நடப்பாண்டு பொதுத் தேர்வில் மொத்த சராசரி 33 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இதுவரை எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வில் சேர்த்து ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 33 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சியாகும். இந்நிலையில், நடப்பாண்டு பொதுத்தேர்வில் அனைத்துப் பாடத்திலும் சேர்த்து, மொத்த சராசரி 33 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி என அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இந்த தேர்ச்சி முறை நடப்பாண்டில் பொதுத்தேர்வு எழுதும் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அடுத்த ஆண்டுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.