​​ நீட் பொதுத் தேர்வு 11 மொழிகளில் நடத்தப்படும் என பிரகாஷ் ஜவ்டேகர் அறிவிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் பொதுத் தேர்வு 11 மொழிகளில் நடத்தப்படும் என பிரகாஷ் ஜவ்டேகர் அறிவிப்பு

நீட் பொதுத் தேர்வு 11 மொழிகளில் நடத்தப்படும் என பிரகாஷ் ஜவ்டேகர் அறிவிப்பு

Feb 28, 2018 10:24 PM

வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நீட் பொதுநுழைவுத் தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் இடம் பெறும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.

தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நடப்பு ஆண்டில் உருது மொழியிலும் கேள்வித்தாள் இடம்பெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் தேர்வு நடத்தப்பட உள்ளது. மத்திய பாடத்திட்டங்களான என்.சி.இ.ஆர்.டி. சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களை அடிப்படையாக கொண்டு தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 9ம் தேதி கடைசி நாள் ஆகும்.