​​ ஆளுநர் மாளிகைக்கு போர்வை, மெத்தை உறைகள் வாங்கியதில் மோசடி செய்த கடை உரிமையாளர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆளுநர் மாளிகைக்கு போர்வை, மெத்தை உறைகள் வாங்கியதில் மோசடி செய்த கடை உரிமையாளர் கைது


ஆளுநர் மாளிகைக்கு போர்வை, மெத்தை உறைகள் வாங்கியதில் மோசடி செய்த கடை உரிமையாளர் கைது

Feb 28, 2018 10:30 PM

ஆளுநர் மாளிகைக்கு போர்வை, தலையணை, மெத்தை உறைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கியதில் மோசடி செய்த, அடையாறில் உள்ள பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு கடந்த 5 ஆண்டுகளாக, அடையாறு L.B.சாலையில் உள்ள சேட் பர்னிஷிங் என்ற கடையில் இருந்து போர்வைகள், தலையணை உறைகள், மெத்தை உறைகள் உள்ளிட்ட பொருட்களை  வாங்கி வந்துள்ளனர்.

இதில், வழங்கப்படாத பொருட்களுக்கு போலி ரசீதுகளைக் கொடுத்து பணம் பெற்று மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மோசடியைக் கண்டுபிடித்த ஆளுநர் மாளிகையை நிர்வகிக்கும் துணைச் செயலாளர் சவுரிராஜன், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 

மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவை தொடர்ந்து,  தலைமறைவாக இருந்த பர்னிச்சர் கடையின் உரிமையாளர் முகமது யூனுஸ் சேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். 

இந்த மோசடிக்கு, ஆளுநர் மாளிகையின் உள்ளே பணிபுரியும் சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்க வாய்ப்பிருப்பதால், காவல்துறை உயரதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.