​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் பட்டப்பகலில் வெட்டிப்படுகொலை

Published : Sep 28, 2020 2:13 PM

செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் பட்டப்பகலில் வெட்டிப்படுகொலை

Sep 28, 2020 2:13 PM

செங்கல்பட்டு மாவட்டம் பழையசீவரத்தில் சிறைக்காவலரை பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்த மர்ம கும்பலை 2 தனிப்படை போலீசார் தேடி வருகிறனர்.

புழல் சிறையில் சிறைக்காவலராக பணியாற்றி வந்த இன்பரசனின் செல்போனை இன்று காலை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், பழைய சீவரம் பெருமாள் கோயில் அருகே வருமாறு கூறியுள்ளனர்.

இதனால் அங்கு சென்ற இன்பரசனை இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பழைய சீவரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் மகன் ராஜனுக்கும், இன்பரசனுக்கும் ஏற்கனவே தகராறு நடந்து முன்விரோதம் இருந்ததாக கூறப்படும் நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.