​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு தீவைத்த தாய் தானும் தற்கொலை

Published : Sep 28, 2020 1:47 PM

குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு தீவைத்த தாய் தானும் தற்கொலை

Sep 28, 2020 1:47 PM

மதுரையில் குடும்ப தகராறு காரணமாக 2 பிஞ்சுக் குழந்தைகளுக்கு தீவைத்த தாய் தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலவாசலை சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதனை தட்டிக்கேட்ட மனைவி தமிழ்ச்செல்வியுடன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்றிரவும் பாண்டி மது போதையில் வந்து தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த தமிழ்ச்செல்வி 3 வயது மற்றும் ஒன்றரை வயது நிரம்பிய தனது பெண் குழந்தைகள் இருவருக்கும் தீவைத்ததோடு, தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

குழந்தைகள் இருவரும் நிகழ்விடத்திலேயே தீயில் கருகி பலியாகினர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.