​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பின்வரிசையில் களமிறங்கியது ஏன்? கேப்டன் தோனி விளக்கம்

Published : Sep 23, 2020 11:07 AM

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பின்வரிசையில் களமிறங்கியது ஏன்? கேப்டன் தோனி விளக்கம்

Sep 23, 2020 11:07 AM

கடந்த சில மாதங்களாக எந்த போட்டியிலும் பங்கேற்காததே ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7வதாக களமிறங்கியதற்கான காரணம் என சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. 217 இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தபோதும், தோனி பின்வரிசையில் களமிறங்கியது விமர்சனத்திற்கு உள்ளானது.

இது குறித்து விளக்கமளித்த அவர், கடந்த சில மாதங்களாக, தான் எந்த போட்டியிலும் பங்கேற்காததாலும், சேம் குரான் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதாலும் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.