​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

Published : Sep 23, 2020 8:52 AM

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

Sep 23, 2020 8:52 AM

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தென்தமிழகம் மற்றும் மேற்கு மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.