​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை திருப்பதியில் சமர்ப்பிக்கப்பட்டது

Published : Sep 22, 2020 8:22 PM

ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை திருப்பதியில் சமர்ப்பிக்கப்பட்டது

Sep 22, 2020 8:22 PM

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருமலையில் சமர்ப்பிக்கப்பட்டது.

திருப்பதியில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 5-ம் நாளான நாளை ஏழுமலையான் கருட வாகனத்தில் எழுந்தருளி மோகினி அலங்காரத்தில் காட்சி தருவது வழக்கம்.

இதற்காக ஸ்ரீவில்லுபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ஆண்டாள் அணிந்திருந்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை திருமலையில் சமர்ப்பிக்கப்பட்டது.

பெரிய ஜீயர் மடத்திலிருந்து யானைகள் அணிவகுத்து செல்ல ஜீயர்கள் திவ்ய பிரபந்தம் பாடி ஏழுமலையான் கோயிலில் ஆண்டாள் சூடி களைந்த மாலை சமர்ப்பிக்கப்பட்டது.