​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் மேலும் 5,344 பேருக்கு கொரோனா..!

Published : Sep 21, 2020 6:48 PM

தமிழகத்தில் மேலும் 5,344 பேருக்கு கொரோனா..!

Sep 21, 2020 6:48 PM

தமிழ்நாட்டில்  புதிதாக 5 ஆயிரத்து 343  பேருக்கு , வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5  லட்சத்து 47  ஆயிரத்தை தாண்டி உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 71 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒரே நாளில் 5 ஆயிரத்து 492  பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய நிலை யில், இது வரையில், குணமடைந்தோர் எண்ணிக்கை, 4 லட்சத்து 92 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வுக்கு, மேலும் 60 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரையில், பலியானோர் எண்ணிக்கை, 8 ஆயிரத்து 871 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில், புதிதாக 982 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கோயம்புத்தூரில் 648 பேருக்கும்,  செங்கல்பட்டில் 219 பேருக்கும்,திருவள்ளூரில் 212 பேருக்கும்,  புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.