​​ நீட் தேர்வு எழுத பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டதற்கு தடை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வு எழுத பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டதற்கு தடை

Published : Feb 28, 2018 8:07 PMநீட் தேர்வு எழுத பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டதற்கு தடை

Feb 28, 2018 8:07 PM

நீட் தேர்வில் பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் எழுதும் மாணவ, மாணவிகள் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ. வரம்பு நிர்ணயித்துள்ளது.

இதில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகள் 30 வயது வரை நீட் தேர்வை எழுதலாம். இந்நிலையில், நீட் தேர்வு வயது வரம்பை எதிர்த்து, கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீட் தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பால், இளநிலை ஆயுர்வேதம் படிக்கும் தங்களால், நீட் தேர்வு எழுத முடியாத சூழல் இருப்பதாகவும், வயது வரம்பு அடிப்படை காரணமின்றி உள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், நீட் தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.