​​ திரிபுராவை பா.ஜ.க. கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திரிபுராவை பா.ஜ.க. கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு தகவல்

Published : Feb 28, 2018 7:05 PMதிரிபுராவை பா.ஜ.க. கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு தகவல்

Feb 28, 2018 7:05 PM

திரிபுரா மற்றும் நாகலாந்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தலா 60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இந்த மூன்று மாநிலங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது. வரும் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதன்படி திரிபுராவில், பா.ஜ.க., IPFT கூட்டணி 35 முதல் 45 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நாகலாந்தில் பா.ஜ.க. NDPP கூட்டணி 27 முதல் 32 இடங்களைக் கைப்பற்றும் என்றும், ஆளும் கட்சியான நாகலாந்து மக்கள் முன்னணி பின்னடைவை சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அங்கு தேசிய மக்கள் கட்சி 27 இடங்கள் வரை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.