​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை போரூர் அருகே தேனீர் கடையில் திடீர் தீவிபத்து

Published : May 24, 2018 3:10 PM

சென்னை போரூர் அருகே தேனீர் கடையில் திடீர் தீவிபத்து

May 24, 2018 3:10 PM

சென்னை போரூர் அருகே தேனீர் கடையில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த வங்கிக்கும் பரவியது.

போரூரை சேர்ந்த ரவி, காட்டுப்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே தேநீர் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு ரவி வீட்டுக்குச் சென்றுவிட்டார். நள்ளிரவில் கடையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் கடையில் இருந்த பொருட்கள் முழுவதும் சேதமடைந்தது.

கடைக்குள் இருந்த சிலிண்டர் வெடித்ததில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கட்டிடத்தின் முன் பகுதியிலும், ஏ.டி.எம். மையத்திலும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

தீவிபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.