​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்ட்ரல்-நேருபூங்கா, டி.எம்.எஸ்.-சின்னமலை மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்

Published : May 24, 2018 10:22 AM

சென்ட்ரல்-நேருபூங்கா, டி.எம்.எஸ்.-சின்னமலை மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்

May 24, 2018 10:22 AM

சென்னையில் சென்ட்ரல் முதல் நேரு பூங்கா மற்றும்  டி.எம்.எஸ்.-லிருந்து  சின்னமலை வரையிலுமான சுரங்கப்பாதைகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். 

சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலும் 2 புள்ளி 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்க ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று தேனாம்பேட்டை டி.எம்.எஸ். முதல், சைதாப்பேட்டை சின்னமலை வரையிலும் 4 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான சுரங்கப்பாதையும் பணிகள் நிறைவு பெற்றன. 

இதனையடுத்து விரிவுபடுத்தப்பட்ட பாதைகளில் மெட்ரோ ரயில் இயக்கும் விழாவுக்கான முன்னேற்பாடுகள் எழும்பூர் ரயில் நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்டன. நாளை பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.