​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது துரதிஷ்டவசமானது - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

Published : Aug 13, 2020 3:53 PM

அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது துரதிஷ்டவசமானது - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

Aug 13, 2020 3:53 PM

அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது துரதிஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு, அரசியல் பின்புலத்துடன் குற்றவாளிகள் பலர் புதுச்சேரியில் உலா வருவதாக தெரிவித்தனர்.

குற்றவாளிகளுக்கு கட்சியில் இடமளிப்பது, தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதுவது போன்றவற்றை, கட்சிகளின் தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே, அரசியலை தூய்மைப்படுத்த முடியும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

குற்றவாளிகள், அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

மேலும், புதுச்சேரியில் எத்தனை ரவுடிக் கும்பல்கள் உள்ளன? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அவற்றுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.