​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த முதியவர்

Published : May 23, 2018 9:37 PM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த முதியவர்

May 23, 2018 9:37 PM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றதால் தவறிவிழுந்த முதியவரை ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.

சென்ட்ரலிலிருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் காட்ராவுக்கு செல்லும் விரைவு ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையிலிருந்து புறப்பட்டது. அப்போது ரயில் கடைசியாக இணைக்கப்பட்டிருந்த முன்பதிவில்லாத பெட்டியில் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீராமுலு என்ற முதியவர் ஏற முயன்றார்.

ரயிலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் கால் தவறி ரயில்பெட்டிக்கும், நடைமேடைக்கும் இடையே அவர் விழுந்தார். அருகே நின்ற ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளரான சண்முகம் துரிதமாக செயல்பட்டு, முதியவரை மீட்டார். நடைமேடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.