​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெள்ளத்தைக் கடந்து மணமகளைக் கைப்பிடித்த மணமகன்..!

Published : Aug 12, 2020 9:56 AM



வெள்ளத்தைக் கடந்து மணமகளைக் கைப்பிடித்த மணமகன்..!

Aug 12, 2020 9:56 AM

வெள்ளத்தில் மிதக்கும் பீகாரில், மணமகன் ஒருவர் படகில் பயணித்து திருமணம் செய்து கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில்,  மணமுடிக்கும் நாளில் கனமழை காரணமாக அப்பகுதியில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தன.

திட்டமிட்டபடி திருமணத்தை நடத்தியே ஆகவேண்டும் என முடிவு செய்த மணமகன், திருமணம் நடைபெறும் இடத்திற்கு மணக்கோலத்துடன் படகிலேயே சென்றார். யாரும் எதிர்பாராத நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் திருமணத்தை முடித்து பெண் வீட்டாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் இக்பால்.