​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை கடந்தது

Published : Aug 12, 2020 9:35 AM

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை கடந்தது

Aug 12, 2020 9:35 AM

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை கடந்துள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதியான வட கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து, அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101 புள்ளி 1 அடியாகவும், நீர் இருப்பு 29.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5644 கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு 1200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக, பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.