​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணம்

Published : Aug 12, 2020 9:31 AM

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணம்

Aug 12, 2020 9:31 AM

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

மேலும் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்துள்ளார். புல்வாமாவின் கம்ராஜிபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்த வெடிகுண்டுகளும் இதர  ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.