​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகின் சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

Published : Aug 12, 2020 9:17 AM

உலகின் சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

Aug 12, 2020 9:17 AM

பார்ச்சூன்(fortune) இதழ் வெளியிட்ட உலகளவிலான சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில், இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இடம்பிடித்துள்ளது.

அமெரிக்காவின் பார்ச்சூன் இதழ், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மிகப்பெரிய 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான பட்டியலில், சிறந்த100 நிறுவனங்களில் கடந்தாண்டை விட 10 இடங்கள் முன்னேறி, இந்தியாவின் ஒரே நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  96வது இடத்தை பிடித்துள்ளது. 

இந்நிறுவனம் பார்ச்சூன் இதழில் தொடர்ச்சியாக 17வது ஆண்டாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில் முதல் 5 இடங்களில் 3 சீன நிறுவனங்களும்,  முதலிடத்தை அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் நிறுவனமும் பிடித்துள்ளது.