​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்ட்ரல் - நேருபூங்கா, DMS - சின்னமலை மெட்ரோ சுரங்க பணி நிறைவு - வெள்ளிக்கிழமை முதலமைச்சர் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல்

Published : May 23, 2018 8:17 PM

சென்ட்ரல் - நேருபூங்கா, DMS - சின்னமலை மெட்ரோ சுரங்க பணி நிறைவு - வெள்ளிக்கிழமை முதலமைச்சர் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல்

May 23, 2018 8:17 PM

சென்னையில் சென்ட்ரல் முதல் நேரு பூங்கா மற்றும்  டி.எம்.எஸ்.-லிருந்து  சின்னமலை வரையிலுமான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளதால், வெள்ளிக்கிழமை இவ்வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலும் 2.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்க ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று தேனாம்பேட்டையின் டி.எம்.எஸ். முதல், சைதாப்பேட்டை சின்னமலை வரையிலும் 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கான சுரங்கப்பாதையும் பணிகள் நிறைவு பெற்று மெட்ரோ ரயில்போக்குவரத்தை தொடங்க தயார் நிலையில் உள்ளது. இந்த வழித்தடங்களில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு நடத்தி, சான்றுகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

இதனையடுத்து மெட்ரோ ரயில் துவக்க விழாவை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் எழும்பூர் ரயில் நிலையம் அருகே விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இந்த துவக்க விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.