​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், போராட்டம்

Published : May 23, 2018 4:48 PM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், போராட்டம்

May 23, 2018 4:48 PM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை பாரிமுனை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற அவர்களை, பாரிமுனை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

image

சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து போலீசார், வேனில் அழைத்துச் சென்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னை அயோத்திக்குப்பம் மற்றும் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 150-க்கும மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதை அடுத்து போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டனர். 

மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் , மார்க் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.  

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் பல்வேறு இடங்களில், சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக மற்றும் மத்திய  அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும்,  உருவபொம்மையை எரித்தும் கண்டனத்தை தெரிவித்தனர். உருவபொம்மை எரித்தபோது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வடபழனியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தினைக் கண்டித்து துணை இயக்குனர்கள் மற்றும் துணை நடிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். ஏ.வி.எம்.ஸ்டுடியோ அருகே நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், துப்பாக்கிச் சூடு சம்பவத்தினைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள எல்ஐசி வளாகத்தில் அகில இந்திய இன்யூரசன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100நாட்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராடி வரும் மக்களின், கோரிக்கையை ஏற்று ஆலையை மூட வேண்டுமே தவிர அவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.