​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா..!

Published : Aug 05, 2020 3:09 PM

2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா..!

Aug 05, 2020 3:09 PM

திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ், பூம்புகார் தொகுதி அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கருணாசிடம் பணியாற்றிய உதவியாளருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், அவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தொற்று உறுதியாகியிருப்பதால், திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பில் கருணாஸ் தன்னைத் தானே தனிமைபடுத்தி கொண்டுள்ளார்.

கடந்த 30ம் தேதி நடைபெற்ற மயிலாடுதுறை புதிய மாவட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட நாகை எம்.பி.செல்வராசு, மயிலாடுதுறை எம்.பி.ராமலிங்கம் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதால், அதில் கலந்து கொண்ட பவுன்ராஜ் எம்எல்ஏவுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தொற்று உறுதியானதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்ப்டடார்.