​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா, 857 பேர் பலி..!

Published : Aug 05, 2020 11:18 AM

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா, 857 பேர் பலி..!

Aug 05, 2020 11:18 AM

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 857 பேர் உயிரிழந்தனர்.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 8 ஆயிரத்து 255ஆகவும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 795ஆகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 12 லட்சத்து 82 ஆயிரத்து 216ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், கொரோனா பாதித்து 5 லட்சத்து 86 ஆயிரத்து 244 பேர் சிகிச்சையில் உள்ளனர்.