​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயோத்தியில் பள்ளிவாசலுக்கு இடம்-ஆவணங்கள் ஒப்படைப்பு

Published : Aug 03, 2020 5:23 PM

அயோத்தியில் பள்ளிவாசலுக்கு இடம்-ஆவணங்கள் ஒப்படைப்பு

Aug 03, 2020 5:23 PM

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடப்பதற்கு முன்னதாக, கடந்த சனிக்கிழமை பள்ளிவாசல் கட்டுவதற்கான 5 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர், சன்னி வக்ப் வாரிய நிர்வாகிகளிடம் வழங்கினார்.

கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி அளித்த தீர்ப்பில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பதிலாக, அயோத்தியில் பள்ளிவாசல் கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை அடுத்து அயோத்தியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தான்னிபூர் என்ற கிராமத்தில் நிலம் ஒதுக்கப்பட்டது.

இங்கு பள்ளிவாசல் அமைக்க இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார கழகம் என்ற அமைப்பை சன்னி வக்ப் வாரியம் ஏற்படுத்தி உள்ளது.