​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நியூசிலாந்துடனான குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் தற்காலிக ரத்து-சீனா

Published : Aug 03, 2020 4:03 PM

நியூசிலாந்துடனான குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் தற்காலிக ரத்து-சீனா

Aug 03, 2020 4:03 PM

நியூசிலாந்துடனான குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து (suspend) செய்வதாக சீனா அறிவித்துள்ளது.

ஹாங்காங் தொடர்பான சீனாவின் சட்டத்துக்கு  நியூசிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்  ஹாங்காங்குடன் செய்த குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தையும் கடந்தவாரம் தற்காலிகமாக ரத்து செய்தது. இந்நிலையில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் (Wang Wenbin),  நியூசிலாந்துடனான ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

எனினும், அந்த ஒப்பந்தம் சீனா-நியூசிலாந்து இடையிலானது அல்ல, ஹாங்காங்- நியூசிலாந்து இடையிலானது என நியூசிலாந்து விளக்கமளித்துள்ளது.