​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!

Published : May 23, 2018 2:12 AM

தமிழகத்தில் நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!

May 23, 2018 2:12 AM

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை அன்று வெளியாகின்றன.

கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த தேர்வை 10 லட்சத்து 1140 பேர் எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார். தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்பேசிக்கு குறுந்தவலாக அனுப்பப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதுதவிர மாணவர்கள் படித்த பள்ளிகளுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்ப படும் என்றும், அங்கு புதன்கிழமை அன்றே மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்வு முடிவுகளை WWW.dge.tn.nic.in  WWW.dge.tn.gov.inஆகிய இணையதளங்களிலும் பார்க்கலாம் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.