​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை சென்ட்ரல் - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் பாதையில் அமைச்சர் சம்பத், அதிகாரிகள் ஆய்வு

Published : May 23, 2018 2:10 AM

சென்னை சென்ட்ரல் - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் பாதையில் அமைச்சர் சம்பத், அதிகாரிகள் ஆய்வு

May 23, 2018 2:10 AM

சென்னையில் மெட்ரோ ரயில் பாதையில் தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை சென்ட்ரலில் இருந்து நேரு பூங்கா வரை 2.7 கிலோ மீட்டர் தூரமும், டிஎம்எஸ் இல் இருந்து சின்னமலை வரை 4.5 கிலோ மீட்டர் தூரமும் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் கடந்த 5 நாட்களாக ரயிலை இயக்கியும், சிக்னல் குறித்தும் ஆய்வு நடத்தினார். இந்த நிலையில் அமைச்சர் சம்பத், மேலாண் இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல் மற்றும் அதிகாரிகள் மெட்ரோ ரயில் பாதையில் ஆய்வு மேற்கொண்டனர்.

பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, வரும் 29 ஆம் தேதி தொடக்க விழா நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதனிடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு ஓராண்டு ஆகியும், செல்போன் சிக்னல் கிடைக்காமல் பேச முடியாத நிலை இருப்பதால் அதனை சரி செய்ய வேண்டும் என்ற பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.