​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே பகுதியில் வசிக்கும் இருபெண்கள் அடுத்தடுத்து கத்திமுனையில் பலாத்காரம்

Published : May 23, 2018 12:55 AM

ஒரே பகுதியில் வசிக்கும் இருபெண்கள் அடுத்தடுத்து கத்திமுனையில் பலாத்காரம்

May 23, 2018 12:55 AM

சென்னை அண்ணாநகரில் ஒரே பகுதியில் வசிக்கும் இருபெண்கள் அடுத்தடுத்து கத்திமுனையில்  பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அண்ணாநகர் மேற்கு, பாடி புதுநகரில் 25 வயதான மென்பொருள் நிறுவன பெண் ஊழியர் தனியாக தங்கியிருக்கிறார். இவர் அம்பத்தூரில் உள்ள தனது நிறுவனத்திலிருந்து திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் அவரது வீட்டிலிருந்து கூச்சலிடும் சத்தம் கேட்டதையடுத்து பொதுமக்கள் திரண்டனர்.

அப்போது தன்னை ஒருவர் கத்தி முனையில் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஜே.ஜே.நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே இதே தெருவில் மென்பொறியாளர் வீட்டின் எதிரில் வசிக்கும் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அப்பகுதியில் வசிக்கும் தினேஷ் என்ற நபர் இதே பாணியில் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.  கணவர் வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில், மாமனார் மாமியாரும் வெளியூர் சென்றுவிட்டதால் இரு குழந்தைகளுடன் தனியாக இருந்துள்ளார் அந்த பெண். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த தினேஷ், குழந்தையில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும், பின்னர் தன்னை கத்திமுனையில் பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

தனியாக இருந்ததால் அச்சத்தில் புகார் அளிக்காமல் இருந்ததாகவும், உறவினர்கள் ஊரிலிருந்து வந்ததும் புகார் அளிக்கலாம் என நினைத்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். தற்போது மேலும் ஒரு பெண்ணுக்கு இதே பாணியில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த பெண் அடையாளம் காட்டியதன் பேரில் தினேஷை கைது செய்து ஜே.ஜே.நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தினேஷ் பலாத்காரம் செய்யப்பட்ட மென்பொறியாளரின் வீட்டினருகிலேயே வசித்து வருகிறார். மென்பொறியாளர் பலாத்காரத்திலும் இவருக்கு உள்ள தொடர்பு குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.