​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுவாச பிரச்சனையை தவிர்க்க போக்குவரத்து காவலர்கள் மாஸ்க் அணிந்து பணியாற்ற அறிவுறை

Published : May 22, 2018 9:49 PM

சுவாச பிரச்சனையை தவிர்க்க போக்குவரத்து காவலர்கள் மாஸ்க் அணிந்து பணியாற்ற அறிவுறை

May 22, 2018 9:49 PM

மாசு மற்றும் புகையில் இருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க் அணிந்துகொண்டு பணியாற்ற போக்குவரத்து போலீசாருக்கு மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அறிவுறுத்தினார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இரண்டாயிரம் போக்குவரத்து காவலர்களுக்கு மாஸ்க் வழங்கப்பட்டது. அப்போது பேசிய ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், உடலை பாதிக்கும் அதிக சூழல் கொண்ட பணி, போக்குவரத்து காவலர்களுடையது என்றார். நிகழ்ச்சியில், வாகன புகையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் குறித்து சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பிரசன்னகுமார் விளக்கினார்.

போக்குவரத்து நெரிசலில் பணியாற்றும் காவலர்கள் ஒரு நாள் சுவாசிக்கும் காற்றானது அவர்களுக்கு  30 சிகரெட் புகையை உள்ளிழுப்பதற்கு சமான தீங்கினை தருவதாக  அவர் கூறினார்.