2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19ல் தொடங்கும்: ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல்
Published : Jul 24, 2020 8:11 AM
2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19ல் தொடங்கும்: ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல்
Jul 24, 2020 8:11 AM
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. மார்ச் மாதத்தில் நடைபெற வேண்டிய 2020ம் ஆண்டுக்கான அப்போட்டிகள், கொரோனா பரவல் காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
டி20 உலக கோப்பை தேதி குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்காததால் போட்டி குறித்து குழப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18இல் இருந்து நவம்பர் 15 வரை நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்ததால் ஐபிஎல் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைத்தது.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அளித்த பேட்டியில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19இல் போட்டி தொடங்குமெனவும், இறுதி போட்டி நவம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.