​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜஸ்தான் 19 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : நடுநிலையாக இருக்க வேண்டிய சபாநாயகர் நீதிமன்றம் வந்தது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி

Published : Jul 23, 2020 3:18 PM

ராஜஸ்தான் 19 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : நடுநிலையாக இருக்க வேண்டிய சபாநாயகர் நீதிமன்றம் வந்தது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி

Jul 23, 2020 3:18 PM

ராஜஸ்தானில் சச்சின்  பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கையில் உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை விலக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருக்கு சபாநாயகர் ஜோஷி அளித்த தகுதிநீக்க நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க நாளை வரை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இப்படி உத்தரவிட உயர்நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என  சபாநாயகர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒரு நாள் பொறுக்க முடியாதா என சபாநாயகர் தரப்பை நோக்கி கேள்வி எழுப்பினர்.

நாளை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தகுதி நீக்க நடவடிக்கை குறித்து தீர்ப்பளித்தாலும், அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என தெரிவித்த நீதிபதிகள், நடுநிலையாக இருக்க வேண்டிய சபாநாயகர் ஏன் நீதிமன்றத்தில் முறையீடு செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பினர்.