​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்

Published : May 22, 2018 11:52 AM

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்

May 22, 2018 11:52 AM

காவிரி மேலாண்மை வாரியத்தை, ஆணையமாக மாற்றிய விவகாரம் தொடர்பாக விவாதிக்க மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.

இந்த மேலாண்மை ஆணையத்திற்கு போதிய அதிகாரம் இல்லை என்றும், இந்த ஆணையத்தால் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்று தர முடியாது என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.