​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
40 வயது நபருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்கப்பட்ட 17 வயது சிறுமி

Published : May 22, 2018 12:22 AM



40 வயது நபருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்கப்பட்ட 17 வயது சிறுமி

May 22, 2018 12:22 AM

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் 17 வயது சிறுமியாக இருந்தபோது 40 வயதான உறவினருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்கப்பட்டவர், 2 ஆண்டுகளுக்குப் பின் அவர்களிடமிருந்து தப்பி வந்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சமடைந்தார்.

தற்போது 19 வயதாகும் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி கடந்த 2016ஆம் ஆண்டு 40 வயதான அவரது தாய்மாமனுக்கு உறவினர்கள் திருமணம் செய்துவைத்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக தன்னை வீட்டில் அடைத்துவைத்திருந்ததாகக் கூறும் அவர், அங்கிருந்து தப்பி வந்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார். தற்சமயம் திருமண வாழ்வில் விருப்பமில்லை என்றும் வேலை செய்துகொண்டே படிக்க ஆசை என்றும் அவர் கூறினார்.