​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடுத்த 24 மணி நேரத்தில் வட, தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Published : Jul 13, 2020 1:38 PM

அடுத்த 24 மணி நேரத்தில் வட, தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Jul 13, 2020 1:38 PM

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.