​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது

Published : Jul 13, 2020 12:19 PM

சென்னையில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது

Jul 13, 2020 12:19 PM

சென்னையில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நாள்தோறும் பதிவாகும் புதிய பாதிப்புகளை விட குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் ஜூன் மாதத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு, ஜூலை மாத துவக்கம் முதலே குறையத்துவங்கியுள்ளது.

அதிலும் கடந்த 7  நாட்களாக தினமும் புதிதாக பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கையை காட்டிலும், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது சுகாதாரத்துறை புள்ளி விவரப்படி தெரியவருகிறது.

மொத்தமாக கடந்த 7 நாட்களில் 9,084 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைவிட அதிகமாக 16,306 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 199 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பில் இதுவரை 75.8 சதவீதம் பேர்  குணமடைந்துள்ளனர். 1.6 சதவீதத்தினர் உயிரிழந்துள்ளதால், 22.6 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.