​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜூன் 1ஆம் தேதி திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் விழா..!

Published : May 21, 2018 5:49 PM

ஜூன் 1ஆம் தேதி திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் விழா..!

May 21, 2018 5:49 PM

திமுக தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்தநாள் விழா ஜூன் ஒன்றாம் தேதி திருவாரூரில் நடைபெற உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுகவினருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், சமூக நீதிக் கொள்கையை இந்தியாவின் தேசியக்  கொள்கையாக மாற்றியவர் கருணாநிதி எனக் குறிப்பிட்டுள்ளார். காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் காரணமாக இருந்தவர் என்றும், இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும் பெற்றுத் தந்தவர் கருணாநிதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலவச மின்சாரத் திட்டம், விவசாயக் கூட்டுறவுக் கடன் ரத்து, உழவர் சந்தை என இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைக் கொண்டு வந்தவர் கருணாநிதி என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் விழா திருவாரூரில் ஜூன் 1 அன்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்  தலைமையில் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.