​​ தீபாவளிக்குள் 99 சதவீத பகுதிகளில் சேவையை விரிவுபடுத்த ஜியோ தீவிரம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபாவளிக்குள் 99 சதவீத பகுதிகளில் சேவையை விரிவுபடுத்த ஜியோ தீவிரம்

Published : Feb 28, 2018 3:16 AMதீபாவளிக்குள் 99 சதவீத பகுதிகளில் சேவையை விரிவுபடுத்த ஜியோ தீவிரம்

Feb 28, 2018 3:16 AM

இந்தியாவில் வரும் தீபாவளிக்குள் 99 சதவீத பகுதிகளில் ஜியோ சேவை விரிவு செய்யப்பட்டுவிடும் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 10 கோடி வாடிக்கையாளர்கள் தங்களது இலவச சேவையை பயன்படுத்திய நிலையில், தற்போது கட்டணம் செலுத்தி செல்போன் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 16 கோடியாக அதிகரித்துள்ளதாக ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

செல்போன் சேவையை மேம்படுத்த மாதந்தோறும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான புதிய டவர்கள் அமைக்கப்படுவதாக கூறியுள்ள ஜியோ நிறுவனம், வரும் தீபாவளிக்குள் இந்தியாவில் 99 சதவீத இடங்களுக்கு ஜியோ சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.