​​ பிரதமர் மோடி ஆட்சியில் பங்குச்சந்தைகள் 13% வளர்ச்சி அடைந்துள்ளன - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி ஆட்சியில் பங்குச்சந்தைகள் 13% வளர்ச்சி அடைந்துள்ளன - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு


பிரதமர் மோடி ஆட்சியில் பங்குச்சந்தைகள் 13% வளர்ச்சி அடைந்துள்ளன - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

Feb 28, 2018 2:39 AM

பிரதமர் மோடி ஆட்சியில் பங்குச்சந்தைகள் 13 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்தியா-கொரியா வர்த்தக உச்சிமாநாட்டில் பேசிய அவர், பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், 4 ஆண்டுகளில் பங்குச்சந்தைகள் 13 சதவீத, ஆண்டு வளர்ச்சி விகிதத்தை சந்தித்திருப்பதாகக் குறிப்பிட்டார். பங்குச்சந்தைகள் முதலீட்டாளர்களுக்கும் 13 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தை தந்திருப்பதாகவும், இந்தியாவில் முதலீடு செய்வது வணிக அடிப்படையில் பொருத்தமானது என்பதையே இது காட்டுவதாகவும் சுரேஷ் பிரபு கூறினார்.

ந்தியாவிற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதே பிரதமர் மோடியின் தொலைநோக்கு என்றும், இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் களையப்படும் எனவும் மத்திய தொழில்-வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.