​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலமைச்சர் எடியூரப்பா பேரம் என்று கூறி ஆடியோ வெளியிட்டது காங்.,

Published : May 19, 2018 6:46 PM

முதலமைச்சர் எடியூரப்பா பேரம் என்று கூறி ஆடியோ வெளியிட்டது காங்.,

May 19, 2018 6:46 PM

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாகக் கூறி, ஆடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு, எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதில், வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்க, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. பி.சி.பாட்டீல் உடன் முதலமைச்சர் எடியூரப்பாவே பேரம் பேசியதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளது.

பதவி மற்றும் பணம் தருவதாகவும், மேலும் 3 எம்.எல்.ஏ.க்களை அழைத்து வருமாறும் எடியூரப்பா கூறுவது ஆடியோவில் இடம்பெற்றுள்ளதாக, காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.