​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் துவங்கியது

Published : Jun 04, 2020 1:03 PM

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் துவங்கியது

Jun 04, 2020 1:03 PM

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவோருக்கு ஹால்டிக்கெட் விநியோகம் தொடங்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ம் தேதி முதல்  நடைபெறவுள்ளது.

இதேபோல் ஒத்திவைக்கப்பட்ட 11ம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு 16ம் தேதியும், 12ம் வகுப்பு விடுபட்ட பாடத் தேர்வு 18ம் தேதியும் நடைபெறவுள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் விநியோகிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

வழக்கமாக பள்ளித் தலைமையாசிரிகளிடத்தில் ஹால்டிக்கெட்டை மாணாக்கர்கள் பெறுவார்கள். ஆனால் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்திற்குச் சென்று ஹால் டிக்கெட் என குறிப்பிடப்பட்டுள்ள லிங்கை அழுத்தி தேர்வு எண், பிறந்த தேதியை  பதிவிட்டு பதிவிறக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.