​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டுக்கே வராமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த செவிலியர்

Published : Jun 04, 2020 9:13 AM

வீட்டுக்கே வராமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த செவிலியர்

Jun 04, 2020 9:13 AM

இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவிட்டு நீண்ட நாட்களுக்குப் பின்னர் வீடு திரும்பிய செவிலியரைக் கண்ட மகள்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

கிங்ஸ்லைன் பகுதியைச் சேர்ந்த செவிலியர் சுஸானா என்பவர் புகழ்பெற்ற குயின் எலிசபெத் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்தார். கடந்த 9 வாரங்களாக தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் இருந்து வந்த சுஸானா வீட்டுக்கு செல்லாமல் இருந்ததால் அவரது இரு மகள்களும் பொழுதைத் தனிமையில் கழித்து வந்தனர்.

இந்நிலையில் பணியை முடித்த அந்த செவிலியர் மகள்களுக்குத் தெரியாமல் வீட்டுக்குச் சென்று, திடீரென மகள்களை அழைத்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த சிறுமிகள் தாயைக் கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.