​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையில் மூன்றாம் தரப்பின் தலையீடு தேவையில்லை-சீனா

Published : Jun 04, 2020 8:44 AM

இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையில் மூன்றாம் தரப்பின் தலையீடு தேவையில்லை-சீனா

Jun 04, 2020 8:44 AM

இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையில் மூன்றாம் தரப்பின் தலையீடு தேவையில்லை என சீனா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், லடாக் எல்லைப்பகுதியில் இருநாடுகளுக்கு இடையே நிலவும் சூழலானது பாதுகாப்பானதாகவும், கட்டுப்படுத்தக் கூடியதாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையில் தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்று வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையை எங்களால் பேச்சுவர்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும், எனவே இதில் மூன்றாம் தரப்பினர் தலையிட வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், எல்லைப் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியிடம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.