​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் கொரோனா சோதனைக்கு வரும் நபர்களின் முழு விவரங்களை பதிய வேண்டும் - மாநகராட்சி ஆணையர்

Published : Jun 03, 2020 5:26 PM

சென்னையில் கொரோனா சோதனைக்கு வரும் நபர்களின் முழு விவரங்களை பதிய வேண்டும் - மாநகராட்சி ஆணையர்

Jun 03, 2020 5:26 PM

சென்னையில் கொரோனா சோதனை நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள சில தனியார் ஆய்வகங்கள், மாநகராட்சிக்கு அளிக்கும் அறிக்கையில், சோதனைக்கு ஆளாகும் நபர்களின் முழு விவரங்களை தாக்கல் செய்ய தவறுவதால், தொற்று உறுதியாகும் நபர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த வகையில் தொற்று உறுதியாகும் நபர்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே மற்றவர்களுக்கு அதை பரப்பிட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். இந்த நிலைமையை தவிர்க்க, தனியார் ஆய்வகங்கள், சோதனைக்கு வரும் நபர்களின் பெயர், முகவரி, ஆதார் எண் மற்றும் மொபைல் எண்களை தவறாமல் பெற்று அவற்றை மாநகராட்சிக்கு அளிக்கும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

மொபைல் எண்களை சரிபார்ப்பதுடன், ஆதார் இல்லாமல் சோதனைக்கு வரும் நபர்களை, சோதனை முடிவு கிடைக்கும் வரை குவாரன்டைன் செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.