​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்து சேவைகளை இயக்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

Published : May 31, 2020 1:12 PM

பேருந்து சேவைகளை இயக்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

May 31, 2020 1:12 PM

தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

பேருந்து சேவைகளை இயக்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளும் வெளியீடு

பேருந்துகளில் பின் படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற அனுமதி

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே பணிக்கு அனுமதிக்கப்படுவர்

மண்டலத்திற்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை

பிற மண்டலங்களுக்கு செல்வோருக்கு அறிகுறி இருந்தால் பரிசோதனை கட்டாயம்

சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்லும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்

பேருந்தில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம்

ஒவ்வொரு பயணத்துக்கு பின்னரும் பேருந்துகள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுவது அவசியம்

பேருந்து நிலையங்களில் பயணிகள் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்

ரொக்க பரிவர்த்தனையை தவிர்க்கும் வகையில் மாதாந்திர பாஸ் வாங்குவதை ஊக்குவிக்க வேண்டும்

குளிர்சாதன பேருந்துகளில் ஏசி பயன்பாட்டை நிறுத்த உத்தரவு

இயன்ற வரையில் கியூ ஆர் கோடு முறையில் டிக்கெட் வழங்குவதை ஊக்குவிக்கலாம்