​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொருளாதார மற்றும் தொழில் வழித்தடங்களாகும் மாநில நெடுஞ்சாலைகள் - நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

Published : May 18, 2018 6:47 PM



பொருளாதார மற்றும் தொழில் வழித்தடங்களாகும் மாநில நெடுஞ்சாலைகள் - நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

May 18, 2018 6:47 PM

கிழக்கு கடற்கரைச் சாலை பொருளாதார வழித்தடம் மற்றும் சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடம் ஆகிய திட்டங்களின் கீழ் 15 நெடுஞ்சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்துடன் இணைந்து 6 ஆயிரத்து 448 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 654.54 கிலோ மீட்டர் தொலைவுள்ள  மாநில நெடுஞ்சாலைகள் விரிவு படுத்தப்பட உள்ளன.  திருச்செந்தூர் - அம்பாசமுத்திரம் சாலை, மேலூர் - காரைக்குடி சாலை   தஞ்சாவூர் - மன்னார்குடி சாலை,கும்பகோணம் - மன்னார்குடி சாலை ஆகியவை இருவழிச் சாலைகளாக மேம்படுத்தப்படுகின்றன.

கும்பகோணம் - சீர்காழி சாலை  இரண்டு மற்றும் நான்கு வழிச் சாலையாகவும், மயிலாடுதுறை - திருவாரூர் சாலை இருவழிச் சாலையாகவும் மேம்படுத்தப்பட உள்ளது. மோகனூரில் இருந்து நாமக்கல் சேந்தமங்கலம் வழியாக ராசிபுரம் வரை செல்லும் சாலை  நான்கு வழிச் சாலையாக விரிவு படுத்தப்படுகிறது. திருச்செங்கோடு முதல் ஈரோடு வரையிலான சாலை நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தப்பட உள்ளது.

துறையூர் - பெரம்பலூர் சாலை இருவழிச் சாலையாக விரிவு படுத்தப்படுகிறது. இதேபோல், ஓமலூர் - திருச்செங்கோடு சாலை, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை, செய்யூர் முதல் போளூர் வரையிலான சாலை,  விருத்தாசலம் - உளுந்தூர்ப்பேட்டை சாலை, கடலூர் - மாடப்பட்டு சாலை ஆகியன விரிவுபடுத்தப் படுகின்றன.